Skip to main content

முகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள நறுங்குழல் நாயகி நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி நகைக் கடையை தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய தகவல் வெளியானது. இதனையடுத்து அவனது குடும்பத்தினரைப் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

 

THIRUCHY ROBBERY...  MURUGAN SURRENDER IN COURT

 

குடும்பத்தினருக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், முருகன் பெங்களூரு எம்.ஜி ரோடு மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு பானசவாடி காவல்நிலையத்தில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களுர் வழக்கில் சரணடைந்த முருகனை தமிழக போலீஸ் திருச்சி வழக்கில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


பெங்களூரு போலீசாரும் முருகனை தேடி வந்தனர். பெங்களூரு எம்.ஜி சாலையிலுள்ள மேயோ ஹால் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ள முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சரண்டர் அடைவதற்கு முன்னதாக கைது செய்துவிட வேண்டும் என்ற டிசி மயிவாகனன் செய்த முயற்சி எல்லாம் வீணாய் போனது.பெங்களுரில் சரண்டர் என்பதால் இனி போலீஸ் பாணியில் விசாரிக்க முடியாது. என்பது திருச்சி போலீசுக்கு பெரிய ஏமாற்றமே !

 

THIRUCHY ROBBERY...  MURUGAN SURRENDER IN COURT

 

திருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். இந்த நோயினால் உடல் மெலிந்தும் பற்கள் விழுந்து மிக மோசமான நிலையில் காணப்பட்டான்.
 

கடந்த ஆண்டு முருகனின் தோற்றம் மிகவும் மோசமான நிலையில் முகத்தில் அறுவை சிகிச்சை சர்ஜரி செய்து 3 பற்களை மாற்றி பல்செட் பொருத்தியுள்ளனர். இதனால் பழைய தோற்றத்திற்கும் தற்போது உள்ள தோற்றத்திற்கும் அதிகம் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் எப்போதும் நெருக்ககமாக இருக்கும் போலீசுக்கே முருகனை அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள்.

தான் தங்கியிருந்த இடத்திலும், போலீஸ் விசாரணையிலும் முருகனின் புதிய தோற்றம் அவனை தப்பிக்க வைக்க வசதியாக இருந்து உள்ளது.

 

THIRUCHY ROBBERY...  MURUGAN SURRENDER IN COURT


 

சார்ந்த செய்திகள்