Skip to main content

யாருக்கும் ஆதரவு இல்லை... விசிகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முக்குலத்துப் புலிகள்!

Published on 03/04/2021 | Edited on 04/04/2021

 

 

தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சியின், சட்டமன்றத் தேர்தல் விளக்கக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னமான 'பானை'யை உடைத்து அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது, நாகையில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் விளக்கக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்கக் கூடாது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும், மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை அவர் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் வைக்க வேண்டும், தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர், பூலித்தேவன் விழாக்களுக்குப் போடப்படும் 144 தடையை நீக்க வேண்டும், சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இந்தநிலையில் கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் சாக்குப் பையில் கொண்டு வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னமான மண் பானைகளை கூட்டத்தில் போட்டு உடைத்து வேட்பாளருக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்