Skip to main content

“டி.டி.வி. தினகரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை” - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

"There is no prohibition to send enforcement notice to TTV Dinakaran again" - Supreme Court verdict

 

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறையால் 2001 ஆம் ஆண்டு பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 1995 மற்றும் 1996 ஆண்டு காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து 62 லட்சத்து 71 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரமற்ற முகவர் மூலமாகப் பெற்று இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக டி.டி.வி. தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தொகையைச் செலுத்த முடியாததால், டி.டி.வி தினகரன் திவாலானவர் என அறிவித்து 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

 

இந்த நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி கொடுத்த உத்தரவை எதிர்த்து 2005 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 23 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் மற்றும் கலைமதி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அந்தத் தீர்ப்பில், 'இந்த வழக்கில் அபராதம் என்பது கடன் தான் எனக் குறிப்பிடுவதுடன் அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதால் அவரை திவாலானவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு உகந்தது தான். ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை அபராதம் விதிக்கும் உத்தரவை இறுதி செய்து இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்காத முன்பே திவாலானவர் என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாதது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

மேலும் இந்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதோடு, மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மீண்டும் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி அதனுடைய நடவடிக்கைகளைத் தொடங்க எந்தவிதமான தடையும் இல்லை எனத் தீர்ப்பில் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்