Published on 14/05/2018 | Edited on 14/05/2018
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசுகையில்
காவிரி குறித்த வரைவு அறிக்கையை இன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமா அப்படி செய்யப்பட்டால் அந்த வரைவு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் உள்ளபடி அதிகாரம் கொண்ட வரைவாக இருக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழகம் எதிர்பார்க்கும் வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யாவிட்டால் அல்லது வரைவு அதிகாரம் வாய்ந்ததாக இல்லை எனில் அடுத்தகட்ட நடவடிக்கையாக திமுக சார்பில் நாளை நடக்கவிருக்கும் தோழமை கட்சிக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கான நியாயமும் உரிமையும் கிடைக்கபோவதில்லை என தெரிவித்தார்.