கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிக்காக நடிகா் மோகன்லால் தனது பெற்றோா் பெயாில் நடத்தி வரும் டிரஸ்ட் மூலம் வெளிநாட்டு வாழ் நண்பா்களிடம் உதவி கேட்டிருந்தாா். அதன்படி அவா்கள் நேற்று கொச்சி விமானநிலையத்துக்கு விமானம் மூலம் உதவி பொருட்கள் அனுப்பியிருந்தனா்.
அந்த உதவி பொருட்களை பெற்று கொள்வதற்காக விமான நிலையம் சென்ற மோகன்லாலிடம் பத்திாிக்கையாளா்கள் கேரளாவில் பாலியியல் தொந்தரவுக்குள்ளான கன்னியாஸ்திாி பற்றி கேள்வி எழுப்பியுள்ளனா். அதற்கு மோகன்லால் ஈ சமயத்தில் ஈ காாியத்த சோதிக்கான் நிங்ஙளுக்கு நாணம் இல்லயா? (இந்த நேரத்தில் இந்த மாதிாி கேட்க உங்களுக்கு வெட்கம் இல்லையா?) என்று கேட்டாா்.
மோகன்லால் இப்படி கேட்டதற்கு பத்திாிகையாளா்கள் கடும் எதிா்ப்பு தொிவித்தனா். இதை தொடா்ந்து இன்று மோகன்லால் அவா் பேசியதற்கு வருத்தம் தொிவிக்கும் விதமாக, நான் பேசியது பத்திாிக்கையாளா்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றால் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உங்களின் உடன்பிறவா சகோதரனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டாா்.