சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 25 ஆம் வாயு கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் திடீரென கெமிக்கல் வாசகம் வீசியதில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் அவசரமாக பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வாயுக்கசிவு ஏற்பட்ட அதே பள்ளியில் மீண்டும் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்த மீண்டும் இந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.