வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி அக்டோபர் நான்காம் தேதி வெளியான படம் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களையும் கவர்ந்தது. தனுஷின் படம் வணிக ரீதியாக முதன் முதலில் ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படம் அசுரன் என்று புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுத்த படமாகும். இந்த படம் குறித்த கேள்விக்கு தேனி கர்ணன் கூறியதாவது, ஒரு படம் தேவையில்லாமல் சில கருத்துக்களை கூறும் போது அந்த படம் வெற்றி பெறத்தான் செய்யும். வெற்றிமாறன் நல்ல இயக்குனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் அவருக்கு கதை எழுத டைம் இல்லையா, ஏன் இந்த மாதிரி கதையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாம் பிறப்பதற்கு முன்பு முன்னோர்கள் காலத்தில் நடந்த சம்பவத்தை ஏன் இப்ப எடுக்க வேண்டும். இப்ப படிக்கிற மாணவர்கள் எல்லாம் மாமன், மச்சான், அண்ணன், தம்பியாக ஒண்ணா,முன்னா பழகிக் கொண்டிருக்கும் போது ஏன் இப்படி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த இயங்குநர்களும், படைப்பாளிகளும் ஏன் ஜாதியை பற்றி எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க, இதனால் எவ்வளவு பிரச்சனைகள் வருது என்று கூறினார். மேலும் இயக்குனர் பாரதிராஜா இந்த பொழப்பு பொழைப்பதற்கு வேற எதோ பொழப்பு பொழச்சுட்டு போயிரலாம் என்று தேனி கர்ணன் கூறினார். அதோடு பாரதிராஜா எடுத்த படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை போராட்டம் செய்து தேனியில் அந்த படத்தை நாங்கள் ஓடவில்லை நாங்க என்று தெரிவித்தார். சினிமாவில் படம் எடுக்கும் போது ஜாதியை பற்றி எடுத்து இளைஞர்களை கெடுத்து விடாதீர்கள் என்றும் கூறினார்.