தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர்களை ஆதரித்து வாக்காள மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆண்டிபட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ...
ஆண்டிபட்டி தொகுதி எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கோட்டையாகும். நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தல் பொதுத்தேர்தல். ஆனால் துரோகிகளின் சதியால் சட்டமன்ற இடைத்தேர்தல் சந்திக்கின்றோம். இந்த தேர்தலின் வெற்றியின் மூலமாக துரோக கூட்டத்திற்கு தகுந்த பாடம் போற்றுவோம்.
ஜெயலலிதா சட்டமன்றத்தில் எனக்குப் பின்னாலும் மூன்றாண்டு காலம் கட்சியின் ஆட்சியும் இருக்கும் என்று கூறினார். தற்போது மண்ணை விட்டு மறைந்தாலும் அம்மா அவர்களின் உணர்வின் மூலம் நம்மோடு வாழ்ந்து வருகிறார். அம்மாவின் கனவை நிறைவேற்ற வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அதிமுகவை எம்ஜிஆர் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் உருவாக்கினார். பின்னர் அம்மா அவர்கள் பல சோதனைகளையும், வழக்குகளையும் சந்தித்து கட்சியையும் ஆட்சியையும் உடல்நிலை சரியில்லாத போதும் கட்டி காப்பாற்றி வந்தார். ஆனால் சில துரோகிகள் திமுக சதி செய்து சட்டமன்ற இடைத்தேர்தலில் உருவாக்கிவிட்டார்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
மத்தியில் நிலையான திறமையான ஆட்சி அமைய வேண்டும் என்றால் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறவேண்டும் நாடு பாதுகாப்பாக, இருக்கவும் நாம் நிம்மதியாக வாழ வேண்டும். நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் அதற்கு நீங்கள் ரவீந்திரநாத் குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, நாடாளுமன்றத்தில் உங்களுக்காக அவர் குரல் கொடுப்பார் ரவீந்திரநாத் குமார் உங்களைப் பற்றி நன்றாக அறிந்தவர் புரிந்தவர் உங்கள் குறைகளை தெரிந்தவர். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்டவர் இப்போது இங்கு இருப்பார், நாளை எங்கு செல்வார் என்று தெரியாது.
நான் அடிப்படையில் ஒரு சாதாரண விவசாயி. படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்து உள்ளேன். ஆனால் இங்கு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சொகுசு ஓட்டல்களில் தங்கி கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஏதோ அமெரிக்காவில் பிறந்தவரை போன்று நடந்து கொள்கிறார். இந்த அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலாவதாக அம்மா அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்திக் காட்டினார். அடுத்து வரும் அம்மா அரசு 152 அடியாக உயர்த்துவது முதன்மையாக கடமையாகக் கொண்டுள்ளது.
விவசாயிகளுக்கு உயிராக இருப்பது தண்ணீர். ஆகவே இந்த அரசு நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே நான்கு ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் கொண்டு ஆய்வு செய்து வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்த தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. ஏரி குளங்களை ஆழப்படுத்தி ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாத அளவிற்கு தூர்வாரப்படும். ஏற்கனவே 3000 ஏரி தூர் வாரப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தைப்பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்கியது. இந்த அரசு மேலும் சிறப்பு நிதியாக ரூபாய் 2000 வழங்க அரசு ஆணையிட்டது அதற்குள் தேர்தல் வந்துவிட்டதால் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண்டு சிறப்பு நிதியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீண்டும் தேர்தல் முடிந்த பிறகு சிறப்பு நிதி வழங்கப்படும் என்றார்.
மத்தியில் நிலையான திறமையான வலிமையான ஆட்சியை உருவாக்கிட நரேந்திரமோடி பிரதமர் ஆகிட, எங்கள் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் ஆண்டிபட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பது நகைச்சுவையாக உள்ளது அதை எப்படி அவர் நிறைவேற்ற முடியும் ஆளும் கட்சியாக அம்மா அரசு இருக்கும் போது அவர் வேண்டுமென்றே மக்களை குழப்பி கொல்லைப்புறத்தில் வழியாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் அதை வாக்காளர்கள் நம்ப வேண்டாம்.
காற்றிலும் ஊழல் செய்யும் விஞ்ஞான ஊழல் பேர்வழிகள் திமுக காரர்கள் 2ஜியில் பல லட்சம் கோடிகளை ஊழல் செய்தவர்கள் பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு முதல் நோபல் பரிசு வழங்கலாம் என்று பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் வருமாறு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் கோரிக்கையை ஏற்று குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லை ஆற்றிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து 152 கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னி அப்பா பிள்ளை பட்டியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருசநாடு, வாலிப்பாறை மலைகிராம மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டிபட்டியில் உள்ள 30 ஊராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறினார். ஆனால் இந்த எடப்பாடி தேர்தல் பிரச்சார வேனில் ஓபிஎஸ் என் மகன் ரவீந்திரநாத்தை முன்னிலைப்படுத்தி நிற்க வைத்துவிட்டு ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு போட்டி போடும் அதிமுக வேட்பாளரான லோகிராஜனை பின்னுக்கு தள்ளி பின்னாடி நிற்க வைத்து விட்டனர். அதன் மூலம் வாக்காள் மக்களுக்கு லோகிராஜன் தெரியவில்லை. அதோடு சொந்த ஊரான ஆண்டிபட்டியிலேயே லோகிராஜனை முதல்வர் எடப்பாடி ஓரங்கட்டி நிற்கவைத்தது கண்டு கட்சிக்காரர்களும் சமூக மக்களும் கூட எடப்பாடி மேல் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.’’