Skip to main content

தேனி காங்கிரஸ் தொகுதிக்கு ஆரூண் அல்லது அவரது மகனுக்கு சீட்டு

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு பத்து  பாராளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி பாராளுமன்ற தொகுதியும் அடக்கம். 

 

a

 


     தேனி  நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற சமூகத்தினர் இருந்து வருகிறார்கள். அதில் முஸ்லிம் மக்களும் ஓரளவுக்கு இருந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் கடந்த 2004 பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலில் டிடிவியை எதிர்த்து போட்டியிட்டு ஆரூண் வெற்றி பெற்றார். அதன்பின் 2009 நடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக ஆருண் போட்டியிட்டு தங்க.தமிழ்ச்செல்வனை படுதோல்வியடையச் செய்தார்.

 

 டிடிவியையும், தங்கதமிழ்செல்வனையும் தோற்கடித்து  இரண்டு முறை வெற்றி பெற்று  இருக்கிறார்.   இப்படி ஆரூணிடம் தோல்வியை தழுவிய அந்த இரண்டு பேருமே முக்குலத்தோர் சமூகத்தை  சேர்ந்தவர்கள்.  இந்த இருவர் தோல்விக்கு துணை முதல்வரான ஓபிஎஸ் பங்கும் மறைமுகமாக இருந்து வந்தது.  அதுபோல் கடந்த 2009 தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ்  கூட்டணி இல்லாததால் தனித்து காங்கிரஸ் சார்பில் களம் இறங்கி  ஆரூண் தோல்வியை தழுவினார்.  அப்படி இருந்தும் 71 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருந்தார். அந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆரூண் மூன்று முறை போட்டி போட்டு இரண்டு முறை வெற்றி பெற்று  தேனி தொகுதியை திமுக கூட்டணி பலத்துடன் காங்கிரஸ் கோட்டையாகவும் உருவாக்கியிருக்கிறார்.

 

a

 


      இந்த நிலையில்தான் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தேனி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என தலைமை வலியுறுத்தியதின் பேரில் திமுகவும் தேனி தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மூன்று முறை போட்டியிட்டு  இரண்டு முறை வெற்றி பெற்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆரூண் மீண்டும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருவதால் தொகுதியில் உள்ள மற்ற கதர் சட்டைகள் சீட் கேட்க சரிவர ஆர்வம் காட்டவில்லை. அதுபோல் ஆரூணுக்கு சோனியா, ராகுல் வரை தனி செல்வாக்கு இருப்பதால் தமிழக தலைமையும் ஆரூணைத் தான் களமிறக்க தயாராகி வருகிறது.  

 

இருந்தாலும் ஆரூணுக்கு உடல் நலம் சரி இல்லை என்ற பேச்சும் ஒருபுரம் இருந்து வருவதால் ஆரூண்  தன் மகன் அசன்ஆரூணை களத்தில் இறக்கலாம் என்ற முடிவிலும் இருந்து வருகிறராம்.  இப்படி  காங்கிரஸ் சார்பில் தேனி தொகுதியில் ஆரூண் அல்லது அவரது மகன் அசன்ஆரூண் போட்டியிடப் போவதாக கதர் சட்டைகள் மத்தியில் பரவலாக பேச்சும் அடிபட்டு வருகிறது. ஆக தேனி பாராளுமன்ற தொகுதியில் நான்காவது முறையாக காங்கிரஸ் களம் இறங்கி தொகுதியை ஆரூண் மூலம் தக்க வைக்க இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.