Skip to main content

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய  துணைக்குழு ஆய்வு!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 


தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணை கண்காணிப்புகுழு ஆய்வு  செய்தது. 

                   

m

                                                                                                                                                                                                                                                                                                                              
  இக்குழுவினருடன் தமிழக பிரதிநிதிகளாக முல்லைப் பெரியாறு அணையின் செயற் பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின் மற்றும்  கேரள பிரதிகளாக அம்மாநில நீர்ப்பாசன துறை  செயற் பொறியாளர் அருண் ஜேக்கப்,  உதவி பொறியாளர் பிரசீத் உடன் வந்தனர்.

 
  இக்குழு கடந்த ஏப்ரல் 30ம்தேதி  அணையின் நீர் மட்டம் 112.80 அடியாக இருந்த போது இக் குழுவினர் ஆய்வு செய்தது.  அதை தொடர்ந்து  தற்போது நீர் மட்டம் 112.45 அடியாக குறைந்துள்ள நிலையில் அணை பகுதியில் செய்ய வேண்டிய  பராமரிப்பு பணிகள் குறித்தும் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இக் குழு ஆய்வு மேற் கொண்டது.

m


   அப்பொழுது முல்லை பெரியாறு மெயின் அணை மற்றும் பேபி அணை கேலரி பகுதி, மதகுபகுதி மற்றும் மழையின்  அளவு அணையின் நீர் வரத்து நீர் வெளியேற்றம் மற்றும் கசிவு நீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.  அதோடு தொடர்ந்து குமுளியில் உள்ள  முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டமூம் நடைபெற்றது.    இந்த  முல்லை பெரியாறு ஆய்வு அறிக்கையை இக் குழு குல்சன்ராஜ்  தலைமையிலான மூவர் குழுவுக்கு அனுப்பி வைக்க உள்ளது.
a

சார்ந்த செய்திகள்