புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் 5,8 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு என்று தமிழக அரசு அறிவித்து. ஆசிரியர்களே இல்லாம பாடமே நடத்தாக பொது தேர்வா? பல போராட்டங்கள் கண்டனங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. உடனடியாக ஒரு மாதம் மட்டும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தவிட்ட நிலையில் பொது தேர்வு இல்லை என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இந்தநிலையில்தான் மார்ச் 3 ந் தேதி அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முனைவர் உஷாராணி ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்கள், அதற்கான அதிகாரிகள், கட்டுக்காப்பாளர் என அதற்கான அலுவலர்களை நியமித்து அவர்களின் தொடர்பு எண்களையும் அனுப்பி வைக்க கேட்டுள்ளார். 8 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லன்னு அமைச்சர் சொல்கிறார். அதிகாரிகள் தேர்வுகள் நடப்பதாக அறிவிக்கிறார்கள் என்னதான் நடக்கிறது என்று பல்வேறு தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தது.
இதைப்பார்த்த முன்னாள் கல்வி அமைச்சர் திமுக தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் பள்ளிக் கல்வித்துறையை காட்டிலும் மட்டமான துறை தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்று பதிவிட்டு சுற்றறிக்கையையையும் வெளியிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பிறகு இன்று வியாழக்கிழமை காலை தங்கம் தென்னரசு தனது பதிவில்..
முகநூலில் “ எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு”அறிவிப்பு குறித்து நான் பதிவிட்டிருந்த நிலைத்தகவலை அடுத்து, சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் என்னைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, எட்டாம் வகுப்பு “ தனித்தேர்வு” என்பது சுற்றறிக்கையில் தவறுதலாக “பொதுத்தேர்வு” எனக் குறிப்பிடப்பட்டு விட்டதாகவும், அதுவே குழப்பத்திற்குக் காரணம் எனவும், தவறு சரிசெய்யப்பட்டு நாளை ( 05/03/20) புதிய சுற்றறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்ததுடன், ஏற்கனவே அறிவித்தபடி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மாற்றம் ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே. என்று பதிவிட்டு தமிழக கல்வித்துறை யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து கல்வித்துறை விமர்சனங்களுக்கு உட்பட காரணம்.. அமைச்சர் செங்கோட்டையனுக்கும் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளுக்குமான நல்லுறவு இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டுகிறது என்கிறார்கள் ர.ர க்களே.