மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜக பிரமுகர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் சமீபத்தில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் நேர்மையான அரசியலுக்கும், நாகரீக பொதுவாழ்வுக்கும் எதிரானதாகும்.
பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சமூகமே, நாகரீக சமூகமாகும். பெண்களை தரக்குறைவாக விமர்ச்சிக்கும் நபர்கள் இத்தகைய பட்டியலில் இடம் பெற முடியாது.
எஸ்.வி சேகர் வேறு ஒருவருடைய கருத்தை, கவனக்குறைவாக பகிர்ந்ததாக கூறியதை ஏற்காத, பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிலர் கோபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்புடைய செயல் அல்ல,
அதே நேரம் ஹெச். ராஜா, எஸ்.வி சேகர் ஆகியோரையும் கைது செய்ய தயங்கும் காவல்துறை, எஸ்.வி சேகர் வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய பத்திரிக்கையாளர்களை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய துடிப்பதன் பிண்ணனி என்ன? என்பதை அறிய விரும்புகிறோம்.
டெல்லியிலிருந்து, தமிழகத்தில் செயல்படும் ஊடகளுக்கும், அதன் ஆரிசியர்களுக்கும் திட்டமிட்டு கொடுக்கப்படும் நெருக்கடிகளை தமிழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு, இவ்விஷயத்தில் வெறுப்பு, விருப்பின்றி நியாயமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.