Published on 14/06/2019 | Edited on 14/06/2019
மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழத்தில் ரயில்வே துறையில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் என தென்னக ரயில்வே சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது அப்பட்டமான மொழி உரிமையை பறிக்கும் செயலாகும். ஒரு மாநிலத்தில் வாழும் பெரும்பான்மை மக்கள், தாங்கள் வேலை செய்யும் துறையில், தங்கள் மொழியை பேசக் கூடாது என்பது அநீதியாகும்.
இது போன்ற உத்தரவு காரணமாக, பெரும்பான்மையான ரயில்வே ஊழியர்களுக்கு மத்தியில் மொழி குழப்பம் ஏற்பட்டு விபத்துகள் உருவாகும் அபாயமும் இருக்கிறது. எனவே , தென்னக ரயில்வே வெளியிட்டிருக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
இது போன்ற மொழியுரிமையை பறிக்கும் செயலில் இனி ஈடுபட வேண்டாம் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.