Skip to main content

தீக்குளிக்க முயன்ற கார்மெண்ட்ஸ் அதிபர்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

 A textile shop owner who tried to set himself on fire; There is commotion in the collector's office

 

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஈரோடு சாஸ்திரி நகர் மூன்றாவது வீதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (46) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

 

அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெட்ரோல் பாட்டிலை அவரிடம் இருந்து பிடுங்கி தண்ணீரை எடுத்து அவர் மீது பீய்ச்சி அடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

அப்போது முகமது அலி ஜின்னா கூறியதாவது, ''எனக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த 12 வருடமாக கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறேன். இந்நிலையில் எனக்கு அறிமுகமான மூன்று பேர் என்னிடம் துணிகளை வாங்கினர். அதற்கு உண்டான பணம் கொடுக்கவில்லை. மேலும் தொழில் சம்பந்தமாக பணம் கேட்டனர். அதில் ஒருவருக்கு ரூ. 15 லட்சமும், மற்ற இருவருக்கு ரூ. 3.80 லட்சமும் பணம் கொடுத்தேன். இதுவரை பணத்தை தரவில்லை. பலமுறை அவர்களிடம் பணம் கேட்டும் எந்த ஒரு பலனும் இல்லை.

 

இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தேன். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பினேன். ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பணம் வாங்கியவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்