Published on 10/01/2022 | Edited on 10/01/2022
தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா பரிசோதனை தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல்வலி இருந்தால் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கோவிட் நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அறிகுறி இல்லையெனில் பரிசோதனை தேவையில்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.