









Published on 19/05/2023 | Edited on 19/05/2023
தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 9,14,320 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். அவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) காலை 10 மணிக்கு வெளியானது. இந்நிலையில் சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை பார்க்க பள்ளிக்கு வந்திருந்தனர். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதே போன்று சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க பள்ளிக்கு மாணவிகள் வந்திருந்தனர்.