Published on 29/10/2018 | Edited on 29/10/2018
முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்காலத்தடை விதித்தது உச்சநீதிமன்றம். முதல்வர் பழனிசாமி மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை சிபிஐ விசாரிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சிபிஐ விசாரிக்க இடைக்காலத்தடை விதித்து தேதி குறிப்பிடாமல் வழக்கை உத்திவைத்தது நீதிமன்றம்.
மேலும் நீதிபதி டெண்டரில் முறைகேடு என்றால் டெண்டரைதானே ரத்து செய்திருக்கவேண்டும். டெண்டரை ரத்து செய்யாமல் முதல்வர் மீது வழக்கு தொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.