"National Technical Research Organisation" (NTRO) தொழில்நுட்ப உதவியாளர் " Technical Assistant" காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த தேர்வானது மத்திய அரசின் ( General Central Civil Service Group - B) ஆகும். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் மார்ச் 15 ஆம் தேதி தொடங்கும் எனவும் , விண்ணப்பிக்க கடைசி நாள் : ஏப்ரல் - 04 ஆகும். இதற்கான இணைய தள முகவரி : http://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do மற்றும் https://ntrorectt.in/ntro/home சென்று விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வுக்கான கட்டணம் இணையவழி பணபரிமாற்றம் (Debit card , Credit card ,Net Banking) மூலம் செலுத்தலாம். இந்த பணியில் சேருவோருக்கு மாதம் ஊதியமாக ரூபாய் 35,400 - 1,12,400 வழங்கப்படும் என அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி (B.E, B.Sc, B.C.A, B.Tech) ஆகும்.

மேலும் மிண்ணணுத்துறை மற்றும் கம்ப்யூட்டர் துறையில் படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். NTRO பணியில் சேருவோருக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றனர். வீட்டு வாடகை, மெடிக்கல் சலுகைகள் , குழந்தை கல்வி , பேருந்து சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என NTRO தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி :
https://ntrorectt.in/ntro/home அணுகவும்.
பி . சந்தோஷ் , சேலம் .