Skip to main content

கடையநல்லூர் அருகே சோலார் மின்சாரம் பாய்ந்து  குட்டி யானை சாவு

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

 


கடையநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒரு வயது குட்டி யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

e

 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் புளியங்குடி அருகே உள்ள முந்தல் என்ற வனப் பகுதியில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று அதிகாலை ஒரு வயது ஆண் யானை இறந்து கிடந்தது. அது  அங்குள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.


நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக காடுகளில் உள்ள விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி  மலை அடிவாரத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றன.  பல இடங்களில் விளை நிலங்களை நாசப்படுத்தியும் பயிர்களை சேதப்படுத்தியும் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்நிலையில் பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பலர் சூரிய மின்வேலி அமைத்துள்ளனர்.  வனப்பகுதியில் இப்படி மின் வேலி அமைத்த சுப்பையா என்பவரது தோட்டத்தில் உணவுக்காக வந்த யானை  மின் வேலியை தாண்டி வந்த போது மின்சாரம் பாய்ந்து பலியானது தெரியவந்தது. 


இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புளியங்குடி வனப்பகுதியில் 4 வயதான யானை ஒன்று சரியான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் இறந்து போனதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்