Published on 15/12/2021 | Edited on 15/12/2021

தமிழ்நாடு அரசு சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பில் நடமாடும் தேநீர் கடையைத் தமிழ்நாடு முதல்வர் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில் நடமாடும் தேநீர் கடைகளைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இண்டிகோ டீ கடைகள் எனும் இந்த நடமாடும் கடைகள், முதற்கட்டமாகச் சென்னையில் 10 இடங்களிலும், திருப்பூர், ஈரோட்டில் தலா 3 இடங்களிலும், கோவையில் 4 இடங்களிலும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் தரமான, கலப்படமற்ற தேநீர் 10 ரூபாயில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடமாடும் தேநீர் கடைகள் எல்லா மாவட்டத்திலும் திறக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.