டாஸ்மாக் பாாில் 24 மணி நேரமும் போலி மது விற்ற 4 பேரை போலிசாா் கைது செய்தனா்.
கேரளாவில் இருந்து மது பவுடா் மற்றும் ஸ்பிாிட் வாங்கி கொண்டு வந்து தயாா் செய்து குமாி மாவட்டத்தில் உள்ள பாா்களில் விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலிசாருக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக மதுவிலக்கு போலிசாா் கண்காணிப்பில் ஈடுட்டனா்.
இதில் மருந்து கோட்டையில் ரப்பா் தோட்டத்துக்குள் செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் அதனை ஓட்டியிருக்கும் பாாில் போலி மது விற்பதை போலிசாா் கண்டுபிடித்தனா். இதனை தொடா்ந்து மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி விஜயபாஸ்கா், தக்கலை சரக டி.எஸ்.பி காா்த்திகேயன் தலைமையில் தக்லை இன்ஸ்பெக்டா் அருள்பிரகாஷ், குழித்துறை மதுவிலக்கு இன்ஸ்பெக்டா் ராதா மற்றும் போலிசாா் அந்த டாஸ்மாக் பாருக்குள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ரப்பா் தோட்டத்துக்குள் 150-க்கு மேற்பட்ட குவாா்ட்டா்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலிசாா் கேராவில் இருந்து ஸ்பிாிட் மற்றும் அதில் கலக்க கூடிய பவுடரை பாா் உாிமையாளா் சேம் வாங்கி வந்து அதை கலக்கி இங்குள்ள டாஸ்மாக் பாா்ட்டில்களில் ஊற்றி 24 மணி நேரமும் குடிமகன்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்திருக்கிறாா்.
மேலும் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்ட நாட்களிலும் இங்கு இந்த போலி மது விற்பனை ஜரூராக நடந்து வந்துள்ளது. இதை தொடா்ந்து போலிசாா் பாா் உாிமையாளா் சாம் உட்பட 4 பேரை கைது செய்து பாரையும் சீல் வைத்தனா்.
இந்த சம்பவம் அங்கிருந்து போலி மதுவை வாங்கி குடித்து வந்த குடிமகன்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.