Skip to main content

தாசில்தார் இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்.டி.ஓ. முற்றுகை

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

rdo




கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் சத்தியன். கடலூர் தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திட்டக்குடி தாசில்தாராக சத்தியன் இருந்தபோது, நீர்நிலைகள், கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்பட ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.
 

இந்நிலையில் இன்று காலை திருக்குளத்தை பார்வையிட வந்த விருத்தாசலம் ஆர்.டி.ஓ. சந்தோஷினி சந்திராவை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், திட்டக்குடி தாசில்தாராக சத்தியன் வருவதற்கு முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்கள் என்றதுடன், தாசில்தார் இடமாற்றத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

திட்டக்குடி திருக்குளம், கொடிகளம் பெரிய ஏரி உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் தாசில்தார் சத்தியன் இடமாற்றம் செய்யப்பட்டாரா என முற்றுகையிட்டவர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஆர்.டி.ஓ. முயன்றார். இருப்பினும் முற்றுகையிட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 

இந்த தகவலை அறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சூரகுமாரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். முற்றுகையிட்டவர்களை சமாதானம் செய்து ஆர்.டி.ஓ.வை மீட்டு அனுப்பி வைத்தனர். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு; கோவிலுக்கு சீல் வைத்த ஆர்டிஓ

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

karur veeranam patti kaliamman temple sealed incident 

 

கோவிலில் பட்டியலின இளைஞரை உள்ளே விட மறுத்த விவகாரத்தில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் வீரணம்பட்டி, கரிச்சபட்டி, கொள்ளுதண்ணிப்பட்டி, சரக்கம்பட்டி, மாலப்பட்டி, கீழ ஆணை கவுண்டம்பட்டி, வீரகவுண்டம்பட்டி ஆகிய எட்டு ஊர்களுக்கு பொதுவான ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.  திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின இளைஞரை கோவிலில் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

 

இதனால் அங்கு நேற்று முன்தினம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்றும் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான வருவாய்த்துறையினர், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான காவல்துறையினர் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

ஆனால் குறிப்பிட்ட சமூகத்தினர், கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து வருவாய்த் துறையினர் கோவிலின் கதவினை இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்டிஓ வின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் வீரணம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

ஆக்கிரமிப்புகள் அகற்றம்; எச்சரிக்கை விடுத்த ஆர்டிஓ

Published on 11/05/2023 | Edited on 11/05/2023
encroachment constructed building destroyed karur kulithalai bus stand

 

பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் ஆர்டிஓ முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நகர பேருந்து நிலையம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்திற்கு நகராட்சி நிர்வாகம் தரை வாடகை கொடுத்து நடத்தி வருகிறது. இந்த பேருந்து நிலையம் 1.22 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் போட்டி போட்டுக் கொண்டு உருவெடுத்தன. இதனால் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

 

இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக அரசு  74  லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து 1.22 ஏக்கர் நிலத்தை பல கட்டங்களாக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிக அளவில் உள்ளதால் விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள்  முடிவு செய்தனர்.

 

பல கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமையில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, நகராட்சி ஆணையர் மனோகர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, நகராட்சி ஆகியவை இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து  கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் முதல் சிறிய வீடுகள் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

 

அப்பொழுது பொதுமக்களுக்கு ஆர்டிஓ புஷ்பா தேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் சட்டப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக ஏதாவது பிரச்சனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.