Published on 15/01/2021 | Edited on 15/01/2021

தஞ்சையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வீரக்குறிச்சி எனும் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்திருப்பது அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இருக்கும் வீரக்குறிச்சி கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக நேற்று நள்ளிரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் தாய் மேரி மற்றும் அவரது மகள் நிவேதிதா பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே வீட்டை சேர்ந்த தாய் மகள் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.