Published on 08/03/2019 | Edited on 08/03/2019
![TAMIZHAKA VAALVURIMAI PARTY JOIN WITH AMMK?](http://image.nakkheeran.in/cdn/farfuture/9LCs3YQ1BsN0edlcjcl01druh6yaL0LY1c2WDFwtyEA/1552042300/sites/default/files/inline-images/images_46.jpg)
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடித்துள்ளது. திமுகவின் தேர்தல் கூட்டணி இறுதி வடிவம் பெற்ற நிலையில் அதிமுக, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் வேலுமுருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவில் கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன. நாளை நடக்கவிருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அமமுகவுடனான இந்த கூட்டணி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.