Skip to main content

தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

new unlock rules in tamilnadu

 

 

 

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை பொது முடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தளர்வுகளுடன் செப்டம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் முழு முடக்கம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதேபோல, இ-பாஸ்  நடைமுறையை ரத்து செய்யப்படுவதால் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இனிமேல் இ-பாஸ் வாங்க தேவையில்லை, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 

 

உணவகங்கள், தேநீர் கடைகளில்  இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதி. மாவட்டத்திற்குள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி, வணிக வளாகங்கள், கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம், வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் உள்ளிட்ட தளர்வுகளை வசிக்க அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்