Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்- ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடு!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

தமிழகம் முழுவதும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30- ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.

tamilnadu state election commission instruction of parties


இந்நிலையில் பொது இடங்களில் சுவரில் எழுதவோ, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், இட உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட சுவரொட்டி ஒட்டுவதோ, எழுதுவதோ கூடாது என்று கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார வாகனங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். பொதுக்கூட்டம், ஊர்வலத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி பெற வேண்டும்.விதிகளை மீறி பயன்படுத்தினால் ஒலிபெருக்கி கருவிகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்