பட்டபகலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வங்கியில் உள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள அசேசம் கிராமத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. கிராமப்புற வங்கி என்பதால் கிராமப்புறத்து மக்கள் தங்களின் தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைப்பதும், மீட்டுவதும் தினசரி 10 லட்சம் வரை வரவு செலவு நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் இன்று மதியம் சரியாக 3 மணிக்கு இன்னோவா காரில் இருந்து குள்ளமான இருவர், உயரமான மூவர் என ஐந்து பேர் முகமூடி அணிந்தபடி கையில் துப்பாக்கியோடு வங்கியில் நுழைந்தனர்.
பதறிப் போன வங்கி ஊழியர்கள் ஆறு பேரும் தகவலை வெளியே சொல்ல முயன்றனர். அதில் ஒருவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தரையில் சுட்டு யாராவது அசைந்தால் உசுரோட போக முடியாது என மிரட்டியபடி மேலாளர் தியாகராஜனை பிடித்து நகை பணம் எல்லத்தையும் இங்கே எடுத்து வர சொல்லு என்றனர்.
பிறகு வங்கியில் இருந்த 6 லட்சம் பணம், 3லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். கிராமபுற வங்கி என்பதால் சம்பவம் உடனே தெரியவில்லை .
அங்குள்ளவர்களோ மேல் அதிகாரிகள் வந்திருப்பதாக இருந்து விட்டனர்.
சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனம், மன்னார்குடி டி.எஸ்.பி அசோகன், தஞ்சை சரக டி.ஐ.ஜீ லோகநாதன் ஆகியோர் தலைமையிலான போலிசார் விரைந்து வந்து வங்கியில் பொறுத்தப்பட்டுள்ள கேமரா மூலம் அடையாளங்களை கொண்டு விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
அடையாளங்கள், அவர்களின் பேச்சுக்களை வைத்து பார்க்கும் போது வட மாநிலத்தவர்களாக இருக்கலாம் என்கிறது விசாரனை டீம்.