Published on 13/07/2019 | Edited on 13/07/2019
அரசே அனைத்தையும் செய்யும் என ஒவ்வொரு தனிமனிதனும் இருக்கக்கூடாது என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஸ்ரீரங்கம் கோயில் குறித்த புத்தகத்தை வெளியிட்ட அவர், அந்த நூல் வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசியுள்ளார்.
மக்கள் சமூகமாக சேர்ந்து அவர்களால் முயன்றதை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் அரசே செய்யும் என ஒவ்வொரு தனிமனிதனும் இருக்கக்கூடாது. எந்த மொழியையும் திணிக்கக்கூடாது அதேபோல் எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. தாய்மொழியை அனைவரும் மறக்காது இருக்க வேண்டும். தமிழ்மொழி மிகவும் இனிமையான மொழி என பேசிய அவர், குடியரசு தலைவர், பிரதமர், நான் உட்பட யாரும் கான்வென்ட் பள்ளிப்பக்கமே சென்றதில்லை எனவும் கூறினார்.