![tamilnadu rains meteorological centre in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/1LccUk-pT-DbyuDitJrqMuhwER6MEpX6bC8dPEMn-tU/1600419276/sites/default/files/inline-images/rains%20%281%29_0.jpg)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் (நீலகிரி) -5 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை)- 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், செப்டம்பர் 19- ஆம் தேதி முதல் செப்டம்பர் 22- ஆம் தேதி வரை மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் செப்டம்பர் 20- ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.