Skip to main content

'தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு'!- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 20/12/2020 | Edited on 20/12/2020

 

TAMILNADU RAINS CHENNAI REGIONAL METEOROLOGICAL CENTRE

'வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். 

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீமிசல் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

 

டிசம்பர் 20, 21- ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 22- ஆம் தேதி மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிககளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.' இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
 Meteorological Department notified Chance of rain in 14 districts

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்று மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மழைக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி, சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நாளை (30-12-23) கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் நாளை(30-12-23) காலை 10,000 அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Next Story

“இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும்  கருவிகள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை” - சென்னை வானிலை மையம்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
“Instruments in use in Indian Meteorological Department are at par with world class” - Chennai Meteorological Department

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதே சமயம்  தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சரியாக கணித்து முன்னெச்சரிக்கை தகவல்களை அளிக்கவில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.  அதில், “சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை.

சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில்  எக்ஸ் பாண்ட் (X band) வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள். உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன் எச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது.

வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.