Skip to main content

சமத்துவபொங்கல் கொண்டாடிய பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்...!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நாகையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றார்,  தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு பொங்கல் கொண்டாடியது பலரையும் மகிழவைத்தது.

 

Papua-New-Guinea-mla-celebrated-Pongal festival

 



தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான  பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள டிவைன் வேர்டு பல்கலைகழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி வரும் நாகை காடம்பாடி பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் அந்த நாட்டின் தனது நண்பர்களை பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு அழைத்துவந்துள்ளார். அதன்படி பப்புவா நியூ கினியா நாட்டின் அங்கோரம் தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லியோ மாலியோ மற்றும் அவரது நண்பர்களான பயஸ்நும்படாய், வெஸ்லி பீசோ, ஜார்ஜ், மானசேரா ஆகியோர் இன்று காலை காடம்பாடி பகுதி மக்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

 

pongal



அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதோடு பொங்கல் பொங்கியபோது "பொங்கலோ பொங்கல்" என சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் பேசிய  லியோ மாலியோ, "இந்தியா வந்தது, குறிப்பாக தமிழகம் வந்தது, இங்கு பொங்கள் கொண்டாடியது மகிழ்ச்சியாக  இருக்கிறது. தமிழர்களின் பொங்கல் பண்டிகையை கொண்டாடியது புதிய அனுபவம்" என கூறினார்.

சார்ந்த செய்திகள்