Skip to main content

அரசு பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க நிதி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

Promote Physical Education in Government Schools

 

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

அரசு பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க முதற்கட்டமாக பள்ளிக் கல்வித்துறை மூலம் 18.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் தொடக்கப்பள்ளிகளுக்கு தலா 5,000 ரூபாயும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 10.000 ரூபாயும் நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு ஏற்றவாறு தரமான விளையாட்டு உபகரணங்களை வாங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.