
தமிழ்நாடு முழுவதும் 560க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றங்களைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை, நெல்லை, தென்காசி, கோவை, தூத்துக்குடி என இந்த அதிரடி சோதனைகளை நேற்றிரவு (23.09.2021) நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் உயரதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடந்த அதிரடி சோதனைகளில், 250க்கும் மேற்பட்ட அரிவாள், பட்டா கத்திகள், துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர். பல்வேறு ஆயுதங்கள் ரவுடிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 560 கிரிமினல்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சில பல ரவுடிகள் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.