Skip to main content

'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

 

tamilnadu nine districts rain chennai meteorological department

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

தமிழகத்தில் கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது. அரபிக்கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்