Published on 03/11/2019 | Edited on 03/11/2019

நவம்பர் 6- ஆம் தேதி தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.