Published on 09/09/2021 | Edited on 09/09/2021
சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. பொருநை நாகரிகம் சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவு வந்துள்ளது. கி.மு. 8ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த துறைமுகமாக கொற்கை துறைமுகம் இருந்துள்ளது. கங்கைச் சமவெளி நாகரிகத்திற்கும், வைகைச் சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது" என்றார்.