Published on 09/06/2020 | Edited on 09/06/2020
தமிழகத்தில் ஜூன் 5- ஆம் தேதி வரை கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக (கட்டுப்பாட்டுப் பகுதிகள்- Containment Zones) 316 பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மட்டுமே கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 201 இடங்கள் நோய்க் கட்டுப்பாட்டுப் (Containment Zones) பகுதிகளாக உள்ளன. திருவண்ணாமலை- 29, கள்ளக்குறிச்சி- 5, கடலூர்- 26, அரியலூர்- 3, செங்கல்பட்டு- 7, காஞ்சிபுரம்- 13, நாகை- 9, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தஞ்சையில் தலா ஒரு இடத்திலும், தென்காசி- 6, தூத்துக்குடி- 2, நெல்லை- 7, திருப்பத்தூர்- 4 இடங்களில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.