Published on 01/12/2019 | Edited on 01/12/2019
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (01.12.2019) நடைபெற இருந்த தேசிய திறன் மேம்பாட்டு (NMMS- National Means-Cum-Merit Scholarship Scheme Examination) தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு, பல மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இத்தேர்வினை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.