தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தற்போது தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.12.2019) விடுமுறை என்று ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
![tamilnadu heavy rain ranipet districts schools holiday announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/w1Q_oxoMmfP9ZhtJrJh8fyNoOXHpIssAJuzflZLNzHc/1575250939/sites/default/files/inline-images/ranipet3.jpg)
ஏற்கனவே கடலூர், செங்கல்பட்டு, புதுவை, ராமநாதபுரம், காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் திருவள்ளூர், தூத்துக்குடி, சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், நான்கு வளாகங்களின் இன்று (02.12.2019) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதேபோல் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக, பல்கலைக்கழக பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.