Published on 22/10/2019 | Edited on 22/10/2019
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் ஆலோசனை. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார், துறையை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.