Published on 04/09/2020 | Edited on 04/09/2020
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு மாதந்தோறும் 10 முட்டைகள் வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதில், 'சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்பு போன்ற உலர் பொருட்களோடு சேர்த்து மாதந்தோறும் இனி 10 முட்டைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உலர் பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி முட்டைகளை வழங்க வேண்டும். கரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற சமூக நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.' இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.