தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2020-21-ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1,387 குடிமராமத்து திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 377 பணிகளுக்கு ரூ.155 கோடியும், திருச்சி மண்டலத்தில் 458 பணிகளை மேற்கொள்ள ரூ.140 கோடியும், மதுரை மண்டலத்தில் 306 பணிகளுக்கு ரூ.156 கோடியும், கோவை மண்டலத்தில் 246 பணிகளை மேற்கொள்ள ரூ.45 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.