Skip to main content

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33 சதவீதமும், கருணைத் தொகையை 11.37 சதவீதமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 
 

அதில் லாபம் ஈட்டிய பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% போனஸ் தரப்படும் என்றும், நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. போனஸ் வழங்குவதன் மூலம் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சுமார் 3,48,503 பேர் பயன் பெறுவார்கள். நிரந்தர ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 8,400, அதிகபட்சம் ரூபாய் 16,800 தீபாவளி போனஸை தமிழக அரசு வழங்கவுள்ளது. 
 

அதை தொடர்ந்து தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், மற்ற அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 20% போனஸ், பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என கூறியுள்ளது. 
 

TAMILNADU GOVERNMENT ANNOUNCED DIWALI BONUS GOVT EMPLOYEES


 

மின்வாரியம்,  போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸும், அதேபோல் வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.  சி மற்றும் டி பணியாளர்களுக்கு கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மேலும் நுகர்பொருள் வாணிபக்கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்