தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
'கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கேரளாவில் கரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு, பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. மழைக்காலம், பண்டிகைக்காலம் தொடங்குவதால் தமிழகத்தில் சவால் நிறைந்த காலகட்டமும் துவங்குகிறது. பொதுமக்கள் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டு முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் கரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 90,000 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.