கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (04/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு 23,000- க்கும் கீழ் குறைந்துள்ளது. சுமார் 1,75,033 மாதிரிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 22,651 ஆக உள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,68,968 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து மேலும் 33,646 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 19,00,306 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் மேலும் 463 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 273 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 190 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கோவை- 2,810, திருப்பூர்- 1,161, ஈரோடு- 1,619, சேலம்- 1,187, தஞ்சை- 1,004, செங்கல்பட்டு- 909, நாமக்கல்- 719, கன்னியாகுமரி- 712, திருச்சி- 689, திருவள்ளூர்- 583, திருவாரூர்- 576, விழுப்புரம்- 521, நாகை- 516, நீலகிரி- 515, திருவண்ணாமலை- 497 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 14 ஆவது நாளாக ஒரு நாள் கரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.