Published on 13/10/2020 | Edited on 13/10/2020

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மாநில ஆளுநர்கள், ஐ.ஜே.கே கட்சியின் ரவி பச்சமுத்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், புதுவை முதல்வர் நாராயணசாமி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், ம.ஜ.க தமிமுன் அன்சாரி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வருக்கு தொலைப்பேசியில் இரங்கல் கூறி ஆறுதல் தெரிவித்தனர்.