Published on 08/01/2019 | Edited on 08/01/2019
ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் தொடர்பான வாட்ஸ்அப் குழுக்களில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக மன்றத்திற்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்கக்கூடாது. அந்ததந்த குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும். அதேபோல் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குரூப்களில் சேர்க்கக்கூடாது சேரவும் கூடாது. வாட்சாப் குழுவிற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று மட்டுமே பெயர் வைக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.