டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தை தேர்ந்த சுமார் 1400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில் கரோனா அறிகுறி கண்டறியப்பட்ட 559 பேரை டெல்லி அரசு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. இவ்வாறு டெல்லி முகாமில் தங்கியிருக்கும் தமிழர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போன்றோர் கோரிக்கை வைத்தனர்.
![Tamilnadu cm edappadi palaniswami written letter to delhi cm arvind kejriwal](http://image.nakkheeran.in/cdn/farfuture/yTxYuczkXtxQ4eyq0RwnHo2ciCntHGqkhNwWMgErQ_U/1587744479/sites/default/files/inline-images/111111_303.jpg)
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 559 பேருக்கு உரிய உணவு போன்றவற்றை வழங்க வேண்டும். ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ளதால் 559 பேருக்கு தேவையான உணவு, மருந்து வழங்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டோரில் நீரிழிவு போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.