Published on 20/09/2021 | Edited on 20/09/2021
![TAMILNADU CHIEF MINISTER MKSTALIN WROTES A LETTER FOR PM](http://image.nakkheeran.in/cdn/farfuture/aKUQyCxj4vzjW9h8PvUebUx8iTfpabyXJak4DfVUWl8/1632133861/sites/default/files/inline-images/MKS4333%20%281%29_53.jpg)
கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20/09/2021) எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டுவரும் நிலையில், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் இத்தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். வாரத்தில் ஆறு நாட்களுக்குத் தினமும் 5 லட்சமும், ஏழாவது நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளைப் போடவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.