15- வது தமிழக சட்டப்பேரவையின் 8 ஆவது கூட்டத்தொடர் காலை 10.00 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சக்கரபாணி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபு பக்கர் கருப்பு சட்டையில் வந்துள்ளார். அதேபோல் தமிமுன் அன்சாரி எம்எல்ஏவும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்ற உறுப்பினர்கள் ஆகியோரும் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
இதனிடையே ஆளுநரின் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையிலிருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.